தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“நான்கு மாதங்களில் இரண்டு கோடி பேர் வேலையிழப்பு”- ராகுல் காந்தி - சமூக வலைதளம்

மத்திய பாஜக அரசு முறைசாரா தொழில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்று கூறிய ராகுல் காந்தி, கடந்த நான்கு மாதங்களில் நாட்டில் இரண்டு கோடி பேர் வேலையிழந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Rahul Gandhi Congress Social media economic tragedy BJP Indian Economy Modi Government Rahul Gandhi targets BJP govt attacking informal sector பூட்டுதல் வேலை இழப்பு ராகுல் காந்தி காங்கிரஸ் பாஜக சமூக வலைதளம் பொருளாதார இழப்பு
Rahul Gandhi Congress Social media economic tragedy BJP Indian Economy Modi Government Rahul Gandhi targets BJP govt attacking informal sector பூட்டுதல் வேலை இழப்பு ராகுல் காந்தி காங்கிரஸ் பாஜக சமூக வலைதளம் பொருளாதார இழப்பு

By

Published : Aug 31, 2020, 9:06 PM IST

டெல்லி:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொருளாதாரம் குறித்து பேசுவோம் (ஆர்த்வியாவஸ்தா கி பாத்) என்ற தலைப்பில் காணொலி ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தக் காணொலியில், நரேந்திர மோடி அரசாங்கம் இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு அழித்தது என்பது குறித்து விளக்கினார். இது தொடர்பாக ராகுல் காணொலி காட்சியில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி காணப்படுகிறது. ஆனால் மத்திய அமைச்சர்கள் இதெற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் பாஜக அரசு முறைசாரா துறையைத் தாக்கி வருகிறது. ஆர்ப்பாட்டம், தவறான ஜிஎஸ்டி மற்றும் பொது முடக்கம் (பூட்டுதல்) ஆகிய மூன்றும் இதற்கான முதன்மை உதாரணங்கள்.

பூட்டுதல் திட்டமிடப்படாதது என்று நினைக்க வேண்டாம். அதேபோல் கடைசி நிமிடத்தில் செய்யப்பட்டது என்றும் நினைக்க வேண்டாம். இதன் நோக்கம் நமது முறைசாரா துறையை அழிப்பதாகும்."
கடந்த 4 மாதங்களில் சுமார் இரண்டு கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். முறைசாரா துறையைச் சேர்ந்த 40 கோடி தொழிலாளர்கள் தீவிர வறுமையில் சிக்கக்கூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. எனினும் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், இந்தியாவில் பொருளாதார பிரச்னை ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார்.

இந்தியாவுக்கு இரண்டு பொருளாதார கட்டமைப்புகள் உள்ளன. ஒன்று முறையான பொருளாதாரம், மற்றொன்று முறைசாரா பொருளாதாரம்.

அதிலும் இந்தியாவின் முறைசாரா துறை வலுவானது, எந்த பொருளாதார நெருக்கடியாலும் இந்தியாவைத் தொட முடியாது.

“நான்கு மாதங்களில் இரண்டு கோடி பேர் வேலையிழப்பு”- ராகுல் காந்தி
நாட்டில் முறைசாரா துறை 90 சதவீத வேலைகளை அளிக்கிறது. முறைசாரா துறை அழிக்கப்பட்டுவிட்டால், இந்தியா வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.
கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் முறைசாரா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.” என்றார்.
மேலும், “நீங்கள் தான் இந்த நாட்டை நடத்துகிறீர்கள். நீங்கள் எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்.
இதனை புரிந்துகொண்டு முழு நாடும் இதற்கு எதிராக போராட ஒன்றுபட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:’அரசியல் முதிர்ச்சியற்ற அரை இத்தாலியர் ராகுல்’ - ஹெச்.ராஜா தாக்கு

ABOUT THE AUTHOR

...view details