உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உயிரிழந்த பெண் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கு அம்மாநில காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இருவரின் வருகையை ஒட்டி ஹத்ராஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக ஹத்ராசில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்த இளம் பெண் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று சென்றனர்.