இந்திய -சீன எல்லையான லடாக்கில் கடந்த மாதம் இரு தரப்பு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 40 வீரர்கள் உயிரிழந்தும் அது குறித்து சீனா எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இதனையடுத்து இருநாட்டு ராணுவத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சீனப்படை இந்திய எல்லையிலிருந்து பின்வாங்கியதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லே எல்லைக்குப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், “இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். சீனா எந்த நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. எல்லையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. ஆனால் மொத்தமாக நிலைமை அப்படியே மாறிவிடும் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது. எல்லை பிரச்னை குறித்து உத்திரவாதமாக எதுவும் தெரிவிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.