தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"பெரும்பான்மைவாதம்" இந்தியாவை இருண்ட பாதைக்கு அழைத்துச் செல்லும் - ரகுராம் ராஜன்! - Uncertain Path": Raghuram Rajan

புது டெல்லி: "பெரும்பான்மைவாதம்"  இந்தியாவை இருண்ட மற்றும் நிச்சயமற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் என ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

raghu

By

Published : Oct 14, 2019, 2:04 PM IST

"பெரும்பான்மைவாதம்" இந்தியாவை இருண்ட மற்றும் நிச்சயமற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் என ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தன்னுடைய சமீபத்திய கருத்தில்,"பெரும்பான்மையினர் உண்மையில் தேசியப் பாதுகாப்பை மேம்படுத்துவார்கள் என்று நான் நம்பவில்லை. அவர்கள் அதைப் பலவீனப்படுத்துகிறார்கள்" எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும்," பெரும்பான்மையினர் தங்கள் விதிமுறைகளில் தேசிய ஒருங்கிணைப்பை விரும்புகிறார்கள். இந்தியாவில், இது இந்துத்துவாவின் உலகளாவிய திணிப்பைக் குறிக்கிறது. இந்த வகையான பெரும்பான்மைவாதம் நிச்சயமாக சிறிது காலத்திற்குத் தேர்தலில் வெற்றிபெறக்கூடும். ஆனால் அது இந்தியாவை வீழ்த்தும் இருண்ட மற்றும் நிச்சயமற்ற பாதை" என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?' அதிர்ச்சியில் குஜராத் மாணவர்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details