தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானா அம்பாலா தளத்திற்கு நவம்பரில் வரும் புதிய ரஃபேல் விமானங்கள்! - இந்திய விமான படையில் ரபேல் விமானங்கள்

டெல்லி: இந்திய எல்லையில் பதற்றம் அதிகரிப்பதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலத்தை அளிக்க நவம்பர் மாதத்தில் மூன்று அல்லது நான்கு ரஃபேல் போர் விமானங்கள் வரக்கூடும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ad
qfr

By

Published : Oct 16, 2020, 7:19 PM IST

இந்திய விமானப்படைக்கு பிரான்சிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்தடைந்தன. அவை ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.

இந்த விமானம் லடாக், லே பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி பிரான்ஸ் நாட்டில் இந்திய விமானிகளுக்கு ஐந்து ரஃபேல் போர் விமானங்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது

மேலும், ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானிகள் பிரான்சிலேயே பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இந்திய எல்லையில் அச்சுறுத்தல் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிப்பதற்காக மூன்று அல்லது நான்கு ரஃபேல் விமானங்கள் நவம்பர் முதல் வாரத்தில் இந்தியா வந்தடையும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விமானங்களை ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான நிலையத்தில் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்துவருகின்றனர்.

பிரான்ஸில் பயிற்சி பெற்றுவரும் வீரர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பயிற்சி முடிந்த நாடு திரும்புவார்கள். மேலும், ரஃபேல் திட்டம் குறித்து மறுஆய்வு செய்வதற்காக பிரான்ஸ் நாட்டிற்கு ஏர் வைஸ் மார்ஷல் என் திவாரி தலைமையிலான ஐ.ஏ.எஃப். குழுவினர் சென்றுள்ளனர்.

இந்த ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்திலும், மேற்கு வங்கத்தில் உள்ள ஹாஷிமரா விமான தளத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரஃபேல் விமானங்கள் பிரிக்கப்பட்டு சிலவற்றை ஹரியானாவில் உள்ள அம்பாலாவிலும், மீதமுள்ளவற்றை மேற்கு வங்காளத்தின் ஹாஷிமரா தளத்திலும் பணியில் ஈடுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details