டெல்லி: ஜன. 26ஆம் தேதி டெல்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த காவல்துறையினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுஷ்ருதா மற்றும் தீரத் ராம் ஷா மருத்துவமனையில் சென்று சந்தித்தார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “காயமடைந்த காவல்துறையினரை சந்தித்தேன். அவர்களின் தைரியம் மற்றும் துணிச்சலைக் கண்டு பெருமிதம் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், கடந்த செவ்வாயன்று டிராக்டர் பேரணிக்காக தடுப்புகளை உடைத்து தலைநகர் டெல்லிக்குள் நுழைய முயன்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தன. பல காவல்துறையினர் காயமடைந்தனர்.