பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் அங்கு பாதிப்படைந்தது. வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையை மத்திய அரசு அம்மாநிலத்திற்கு அனுப்பிவைத்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சென்றுள்ளார். அப்போது, வெள்ளப்பெருக்கு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் மீது அவர் கோபப்பட்டுள்ளார்.
பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்ட நிதிஷ் குமார்! - Bihar News
பாட்னா: வெள்ளப்பெருக்கு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் மீது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கோபமடைந்துள்ளார்.
Nitish kumar
இதுகுறித்து நிதிஷ் குமார், "நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாட்னாவில் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பது பெரிய பிரச்னையா? அமெரிக்காவில் கூட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது" என கோபமாக பதிலளித்துள்ளார். முதிர்ச்சியான அரசியல்வாதி என பெயர் எடுத்த நிதிஷ் குமார், பத்திரிகையாளர்கள் மீது கோபப்பட்ட சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.