தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்புவதற்கான சபாநாயகரின் அதிகாரத்தை கேள்வி கேட்பது கவலை அளிக்கிறது: பி.டி.டி ஆசாரி

மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி ஆசாரி, ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், இப்போதைய வழக்கில், கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க மறுத்ததற்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸின் அதிகாரம் குறித்து அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரிப்பது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் முடிவு எடுத்துள்ளன.

பி.டி.டி ஆசாரி
பி.டி.டி ஆசாரி

By

Published : Jul 27, 2020, 4:01 PM IST

28 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கும் நிலையில் உச்சநீதிமன்றம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆகியவை, சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவுக்கு எதிராக அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தாக்கல் செய்த மனுக்களை அனுமதித்திருப்பது, கவலைகளை அதிகரித்திருப்பதாக அரசியல் சட்ட விவகாரங்களுக்கான நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி ஆசாரி, ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், இப்போதைய வழக்கில், கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க மறுத்ததற்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசின் அதிகாரம் குறித்து அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரிப்பது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் முடிவு எடுத்திருக்கின்றன.

அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கான ஆதரவைப் பதிவு செய்வதற்காக ஜெயப்பூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும்படி கட்சி உத்தரவிட்டதை மீறியதை அடுத்து முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் மற்றும் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ-களுக்கு ராஜஸ்தான் சபாநாயகர் சி.பி.ஜோஷி ஜூலை 15ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார்.

“சபாநாயகர், விதிகளின்படிதான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த விதிகள், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10-ஆவது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த விதியின்படி, போதுமான காரணங்கள் இருக்கிறதா என்று மனுதாரர் திருப்தி அடைந்தால் போதும், சபாநாயகர் திருப்திஅடையவேண்டியதில்லை,” என்றார் பிடிடி ஆசாரி.

1992 ஆம்ஆண்டு கிஹோட்டோ ஹோலோஹான் வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அளிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் சபாநாயகர் எடுக்கும் முடிவை மட்டும்தான் நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும் என்றும் அதற்கு முன்பு தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

“சபாநாயகர், தமது இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, அவரது செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று 1992-ம் ஆண்டு சட்டம் உறுதி செய்துள்ளது,“ என்று ஈடிவி பாரத்திடம் ஆசாரி கூறினார்.

தற்போதைய நிலையை தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், சபாநாயகர் இப்போதைக்கு சச்சின் பைலட் முகாமில் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் இன்னும் ஒரு நிவாரணமாக, 1985 கட்சி தாவல் தடுப்பு சட்டத்தோடு தொடர்புடைய முக்கியமான அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளுடன் இந்தப் பிரச்னை தொடர்புடையது என்பதால், மத்திய அரசையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்ற சச்சின் பைலட்டின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.

உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு குறித்து ஆசாரி கூறும்போது, “சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை நீங்கள் எதிர்க்க முடியும் என்றும், அந்த நோட்டீஸ் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதுதானா என்று கேள்வி எழுப்ப முடியும் என்றும் இதனை பொருள் கொள்ளலாம்,” என்றார்.

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்தல்

“இந்தச் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்வதற்காக இரண்டு காரணங்களின் அடிப்படையில் நோட்டீஸ் வழங்க முடியும். முதலாவதாக அவையில் கட்சியின் கொறடா உத்தரவை மீறி ஒரு உறுப்பினர் செயல்பட்டிருந்தால் நோட்டீஸ் அனுப்ப முடியும்.

இரண்டாவதாக, கட்சியின் உறுப்பினர் தமது பதவியை தாமாக முன் வந்து ராஜினாமா செயும் பட்சத்திலும் நோட்டீஸ் அனுப்ப முடியும்” என்று சொல்கிறார் ஆசாரி.

“தாமாக முன்வந்து கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதன் அடிப்படையிலான காரணம் குறித்து சட்டத்தில் எதுவும் வரையறை செய்யப்படவில்லை. ஆனால், இது குறித்து உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் விளக்கம் அளித்துள்ளது,” என்கிறார் ஆசாரி.

“ஒரு உறுப்பினர், சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து தாம் சார்ந்திருக்கும் கட்சியின் ஆட்சியை கலைக்கும்படி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தால், அவர் தாமாக கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிட்டார் என்பதற்கு போதுமான ஆதாரமாகக் கொள்ளலாம் என்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது,” என்று விவரிக்கும் ஆசாரி, “வெறுமனே உறுப்பினரின் ஒரு நடவடிக்கை மட்டுமே போதுமான ஆதாரமாக கருதப்பட்டது” என்றார்.

தகுதிநீக்கத்துக்காக சபாநாயகர் எவ்வாறு நோட்டீஸ் அளிக்க முடியும்

ஒரு உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வதற்கான மனு ஒருமுறை முன்னெடுக்கப்பட்ட பின்னர், விதிமுறைகளின் படி சபாநாயகர் அந்த உறுப்பினருக்கு நோட்டீஸ் அனுப்புவார் என்கிறார் ஆசாரி.

“ஒரு உறுப்பினரின் தகுதி நீக்கத்தைக் கோருவதற்கு அவர் மேற்கோள் காட்டிய காரணம் நியாயமாக இருப்பதை மனுதாரர் திருப்திப்படுத்த வேண்டும் என விதிகளில் ஒன்று கூறுகிறது. மனுவின் நியாயத்தன்மை குறித்து தம்மை திருப்திப்படுத்துவதற்கான பொறுப்பு மனுதாரரிடம் உள்ளது. ஆனால், சபாநாயகர் மீது அல்ல,” என்றார் ஆசாரி.

தவிர இரு தரப்பையும் விசாரணை மேற்கொண்டபிறகு மற்றும் உறுப்பினரிடம் இருந்து பதிலைப் பெற்ற பிறகு சபாநாயகரால் இந்த விஷயம் தீர்மானிக்கப்படும். தவிர, அனைத்து ஆவணங்கள் அடிப்படையிலான ஆதாரங்களை ஆய்வு செய்வது உள்ளிட்டவையும் இதில் அடங்கி இருக்கிறது.

இந்த அனைத்தும் சட்டத்தின் தேவைக்கு ஏற்ப, அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட விசாரணை வாய்ப்பை சபாநாயகர் கொடுப்பார். இத்தனைக்கும் பிறகுதான் சபநாயகர் வழக்கை தீர்மானிப்பார் என்று ஆசாரி விளக்கினார்.

ஒருமுறை சபாநாயகர் தமது முடிவை அளித்தால் மட்டுமே, அதன் பின்னர்தான் நீதிமன்றம் அதனை பரிசீலனை செய்ய முடியும். சபாநாயகர் முடிவை எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது என்பது நீதிமன்றத்தின் வரம்பைப் பொறுத்தது.

கட்சி தாவல் தடை சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி.ஜோஷியின் மனுவை இந்தவாரம் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை விரிவாக விசாரணை மேற்கொள்ள விரும்புவதாக கூறி இருக்கிறது.

சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தாக்கல் செய்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க க்கூடாது என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி விட்டது.

“1992-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டது. ஆகையால், இதுவரை இந்த விவகாரம் விரிவாகும் என்ற நம்பிக்கையை பொறுத்தவரை, சில கவலைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. முதலில் உயர் நீதிமன்றத்திலும், பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்விலும் இது மறுபடியும் விசாரிக்கபட்டு வருகிறது,” என்றார் ஆசாரி.

“அவர்கள் இந்த விவகாரத்தை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வாய்ப்பிருக்கிறது. அதன் பின்னர் அந்த அமர்வு இந்த சட்டத்தில் தீர்வுகாணும். அதற்கு சாத்தியம் இருக்கிறது. அந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றுவதற்கும் சாத்தியம் இருக்கிறது,” என்று ஆசாரி மேலும் கூறினார்.

“இது உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய விவகாரம் ஆகும். நீதிமன்றத்தைத் தவிர, வேறு எந்த அதிகாரமும் இதற்குள் தலையிட முடியாது.”

பிரிவு 174-ன் கீழ் ஆளுநரின் அதிகாரம்

இதற்கிடையே, ராஜஸ்தானில் மேலும் ஆழமான அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட், தமக்கான பலத்தை நிரூபிக்க சட்டசபைக் கூட்டத்தை கூட்டுமாறு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கேட்டிருக்கிறார்.

“பிரிவு 174-ன் படி ஆளுநர் அவையை கூட்ட அழைப்பு விடுக்க முடியும். ஆனால், அமைச்சரவையின் அறிவுரையின்படியே ஆளுநர் அவையை கூட்ட முடியும். நமது அரசியலமைப்பு சட்டத்திட்ட விஷயங்களின்படி ஆளுநர் என்பவர், தனிப்பட்ட அதிகாரம் படைத்தவர் அல்ல,” என்றார் ஆசாரி.

ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, அவையை கூட்டுவதில் மாநில அரசின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜஸ்தான் பாராளுமன்ற விவகாரங்களுக்கான துறைக்கு பரிந்துரை அனுப்பி உள்ளார். அதிகாரப்பூர்வமான அந்த தகவல் தொடர்பில் அவையை கூட்டுவதற்கான தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை. மாநில அமைச்சரவையின் முடிவுக்கு அனுமதி வழங்கப்பட்டதா எனவும் அதில் குறிப்பிடப்படவில்லை என்றும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: உலகளாவிய படைகளின் மறுசீரமைப்பு: நாம் இருதுருவ உலகத்தை நோக்கி செல்கிறோமா?

ABOUT THE AUTHOR

...view details