ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அலுவலர் சுசாந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டார். அதில் மலை பாம்பு ஒன்று எதையோ விழுங்கிவிட்டு வயிறுமுட்டிய நிலையில் அருகிலுள்ள தண்ணீர் தொட்டி ஒன்றில் உடலை குளிர்விக்க முயற்சிக்கிறது.
வயிறுமுட்ட விழுங்கிய மலை பாம்பு உடலை குளிர்விக்க தண்ணீரில் தஞ்சம்: வைரல் காணொலி - இந்திய வனத்துறை அலுவலர் சுசாந்தா நந்தா
புவனேஷ்வர்: வயிறுமுட்ட உணவை உட்கொண்ட மலை பாம்பு ஒன்று உடலை குளிர்விக்க தண்ணீரில் தஞ்சமடைந்துள்ள காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
![வயிறுமுட்ட விழுங்கிய மலை பாம்பு உடலை குளிர்விக்க தண்ணீரில் தஞ்சம்: வைரல் காணொலி python-viral-video](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8023925-thumbnail-3x2-l.jpg)
python-viral-video
வயிற்றில் எடை அதிகமாகயிருப்பதால் அதனால் முழு உடலை தண்ணீரில் நனைக்க முடியாமல் திணறுகிறது. பின்னர் பாதி உடலை மட்டும் தண்ணீரில் நனைத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறது. அந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:31 முட்டையுடன் பிடிப்பட்ட மலைப்பாம்புகள்!