தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மலைப் பாம்பு விழுங்கிய ஆடுகளை உயிருடன் மீட்ட மேய்ப்பர்கள் - ஆந்திர பிரதேச மாநிலம்

விசாகப்பட்டினம்: மலைப் பாம்பு விழுங்கிய ஆடுகளை உயிருடன் மேய்ப்பர்கள் மீட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

PYTHON

By

Published : Sep 8, 2019, 6:31 PM IST

Updated : Sep 8, 2019, 7:02 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிங்கரல்லாபாடு மலைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென்று வந்த மலைப்பாம்பு, அங்கிருந்த ஆடு குட்டியை உயிருடன் விழுங்கியது.

அதன் பின்னரும் பசி அடங்காததால் அருகிலிருந்த மற்றொரு ஆட்டையும் விழுங்க முயன்றது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மேய்ப்பர்கள், அந்த மலைப்பாம்பைக் கொன்றனர். பின் அந்த பாம்பின் வயிற்றைக் கிழித்து வயிற்றுக்குள் இருந்த ஆடுகளை உயிருடன் மீட்டனர்.

மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு
Last Updated : Sep 8, 2019, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details