உலகளவில் நான்காவது மிகப்பெரிய ரயில்வே துறையான இந்திய ரயில்வேயில், முதன்முறையாக தனியார் பங்களிப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்கினால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்,வேலையிழப்பு ஏற்படும் என எதிர்க் கட்சிகள் குரல் ஏழுப்பி வருகின்றன.
இதுகுறித்து பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், "ரயில்வேயில் தனியார் நிறுவனம் வருவதால் வேலையிழப்பு ஏற்படுவதற்குப் பதிலாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும். தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டில் 5 விழுக்காடு ரயில்கள் மட்டுமே தரப்படவுள்ளன. மீதமுள்ள 95 விழுக்காடு ரயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இயக்கப்படவுள்ளன. ஏழைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தான் ரயில்களின் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.