புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ புளூ வேள் (Blue whale) விளையாட்டை தடை செய்ய கோரியது முதலில் புதுச்சேரி அரசு தான். ஆன்லைன் மூலம் எந்த ஒரு விளையாட்டையும் அனுமதிக்க முடியாது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலம் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். புதுச்சேரியில் ஒருவர் 40 லட்ச ரூபாயை இழந்ததோடு தற்கொலையும் செய்துள்ளார். எனவே, மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். ரம்மி விளையாட்டில், தான் அதிக பணம் சம்பாதித்ததாக புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் பேசுவது போல் விளம்பரம் செய்யப்படுவதையும் தடை செய்ய கோரியுள்ளேன்.