தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மல்லாடி கிருஷ்ணராவிற்கு பாராட்டு விழா: புதுச்சேரி முதலமைச்சர், சபாநாயகர் ஏனாம் பயணம்! - புதுச்சேரி முதலமைச்சர் ஏனாம் பயணம்

புதுச்சேரியின் சிறந்த எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லாடி கிருஷ்ணராவிற்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக அம்மாநில முதலமைச்சர், சபாநாயகர் ஆகியோர் ஏனாம் சென்றனர்.

மல்லாடி கிருஷ்ணராவிற்கு பாராட்டு விழா
மல்லாடி கிருஷ்ணராவிற்கு பாராட்டு விழா

By

Published : Jan 5, 2021, 8:28 PM IST

புதுச்சேரி:புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் உள்ளிட்ட பிராந்திய பகுதிகளில் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராக ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சுகாதாரத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணராவ் தேர்வுசெய்யப்பட்டார்.

இதற்கான பாராட்டு விழா நாளை (ஜன. 06) ஏனாம் பிராந்திய பகுதியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக மல்லாடி கிருஷ்ணாவிற்குச் சிறந்த சட்டப்பேரவை உறுப்பினருக்கான சான்றிதழும், 25 ஆண்டுகள் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பாராட்டு விழா அரசு சார்பில் நடைபெறுகிறது. இவ்விழாவில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் பங்கேற்வுள்ளனர்.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் ராஜமுந்திரி சென்றனர். அங்கிருந்து கார் மூலம் ஏனாம் சென்று நாளை அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க:சரக்கு ரயில் சேவைக்கான புதிய இணையதளம்: பியூஷ் கோயல் தொடங்கிவைப்பு

ABOUT THE AUTHOR

...view details