தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேளாண் சட்ட திருத்தம்: இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைப்பு - வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு

பஞ்சாப்: இந்தியா கேட் அருகே வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் டிராக்டருக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைப்பு
இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைப்பு

By

Published : Sep 28, 2020, 10:04 AM IST

நாடாளுமன்றத்தில் சென்ற வாரம் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை (செப்.28) பஞ்சாப் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் இந்தியா கேட் அருகே ஒரு டிராக்டருக்கு தீ வைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ வைக்கப்பட்ட டிராக்டரை அகற்றினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்து மக்களிடையே புரிதலை ஏற்படுத்த பாஜக நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: வேளாண் சட்டமுன்வடிவுக்கு எதிரான ரயில் மறியல் போராட்டம் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details