பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்றுவரும் சிறப்பு சட்டப்பேரவை அமர்வின் இரண்டாவது நாளான இன்று (அக்.20), மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை அம்மாநில முதலைமைச்சர் அம்ரீந்தர் சிங் கொண்டுவந்தார்.
அப்போது, மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, புதிதாக மூன்று மசோதாக்களையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் அறிமுகப்படுத்திய மூன்று மசோதாக்கள்:
- விவசாய உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு, வசதிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள், பஞ்சாப் திருத்த மசோதா 2020,
- அத்தியாவசியப் பொருள்கள் (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பஞ்சாப் திருத்தம்) மசோதா 2020
- விலை உத்தரவாதம், பண்ணை சேவைகள் தொடர்பான விவசாயிகள் ஒப்பந்தம் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பஞ்சாப் திருத்தம்) மசோதா 2020.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.