தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஹீம் சிங்குக்கு அடுத்த சிக்கல்! - பஞ்ச்குலா மற்றும் சிர்சாவில் வன்முறை

சண்டிகர்: சீக்கிய புனித நூல்களைத் திருடிய வழக்கில், சர்ச்சைக்குரிய தேரா சச்சா சவுதா பிரிவுத் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், சமந்தப்பட்டுள்ளார் என்று சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

 சீக்கிய புனித நூல்களைத் திருடிய வழக்கு: விசாரணையில் முன்னேற்றம்...
சீக்கிய புனித நூல்களைத் திருடிய வழக்கு: விசாரணையில் முன்னேற்றம்...

By

Published : Jul 7, 2020, 12:50 AM IST

புர்ஜ் ஜவஹர் சிங் வாலா கிராமத்தில் இருந்து 2015 ஜூன் மாதம் குர் கிரந்த் சாஹிப்பின் 'பிர்' திருடியதாக ஃபரிட்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் ஏழு பேரை சிறப்பு புலனாய்வு சனிக்கிழமை கைது செய்தது.

ஃபரிட்கோட்டில் உள்ள பஜகானா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில், ஐந்து பேரை நீதிமன்றக் காவலில் வைக்க ஃபரிட்கோட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், பெபல் கலான் மற்றும் கொட்காபுரா நகரங்களில் புனித நூல்கள் திருடப்பட்ட சம்பவங்களுக்கு எதிரான போராட்டங்களின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

ராம் ரஹீம் (52) தற்போது ஹரியானாவின் ரோஹ்தக்கிலுள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 25, 2017 அன்று அவர் தண்டனை பெற்றது, பஞ்ச்குலா மற்றும் சிர்சாவில் வன்முறைக்கு வழிவகுத்தது.

இதனால் 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 260 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2019 ஜனவரியில் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிகையாளரைக் கொலை செய்த வழக்கில் அவருக்கும் மேலும் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ராகுல் காந்தி தொடர்ந்து தேசத்தை இழிவுப்படுத்துகிறார்'- ஜேபி நட்டா

ABOUT THE AUTHOR

...view details