சண்டிகர்:வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாய அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். இதற்கிடையில், டெல்லியில் வேளாண் சட்டங்கள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து விவசாயிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு தீபாவளியை அனுசரிப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் எதிர்ப்பின் அடையாளமாக தீபாவளி நாளன்று இரவில் தீப்பந்தங்களை ஏற்றி வைப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.