தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை திருத்தச் சட்டம் - கேரளாவை பின் தொடர்ந்த பஞ்சாப் - குடியுரிமை திருத்தச் சட்டம்

சண்டிகர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Singh
Singh

By

Published : Jan 17, 2020, 3:35 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கேரளா சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிடம் செய்தியாளர் ஒருவர் கேரளா போல் பஞ்சாப்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என அவர் பதிலளித்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்றது.

இதில், சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை தானும் தடுக்க மாட்டேன், காங்கிரஸ் கட்சியும் தடுக்காது. ஆனால், சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என அமரிந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பஞ்சாப் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சுவாமிநாதன் மீண்டும் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details