கடந்த 20ஆம் தேதி விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.
குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இதற்கிடையே, போராட்டத்தை கைவிட்டு விட்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மத்திய வேளாண் துறையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அழைப்பை விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன. மேலும், மத்திய அரசிடமிருந்து முறையான அழைப்பு வராத வரை எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் கலந்து கொள்ள மாட்டோம் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
சாலை மறியல் போன்ற போராட்டத்தை கைவிட வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தேர் சிங் கோரிக்கை விடுத்த நிலையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சட்டப்பேரவையை கூட்டி வேளாண் சட்டத்தை நிராகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமென பஞ்சாப் முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: யோகேந்திர யாதவ் கைது