தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குரல் கொடுக்கும் பஞ்சாப் முதலமைச்சர் - குடிபெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு

சண்டிகர்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Amrinder Singh
Amrinder Singh

By

Published : May 17, 2020, 7:52 PM IST

நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிய நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரு நகரங்களில் பணியாற்றிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு, பலநூறு மைல்கள் நடந்துச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, தொழிலாளர்கள் உயிரிழக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

இத்தகைய சூழல் குறித்து பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பஞ்சாப் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய இலவச அரிசி, கோதுமை ஆகியவை வழங்கப்படுகின்றன.

அதேவேளை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தற்போது இலவச பருப்பு வழங்கப்படும் நிலையில், நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோரிடம் குடும்ப அட்டை இல்லை. எனவே, அவர்களுக்கும் இலவச பருப்பு கிடைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவேண்டும்.

மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாநில அரசுகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:மொத்த செலவையும் நாங்கள் ஏற்கிறோம் - அதிரடி காட்டும் மம்தா

ABOUT THE AUTHOR

...view details