தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி மதுபான விவகாரம்: விசாரணைக்கு உத்தரவிட்ட அமரீந்தர் சிங்! - பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்

போலி மதுபானம் குடித்து 21 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Breaking News

By

Published : Aug 1, 2020, 4:18 PM IST

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், படாலா, தரன் உள்ளிட்ட மாவட்டங்களில் போலி மதுபானம் குடித்த 21 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஜலந்தர் பிரிவு மண்டல ஆணையர் தலைமையில் விசாரிக்க முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணைக் குழுவுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி மதுபானம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மாநிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் போலி மதுபானம் பரவியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'மது என்ன அத்தியாவசிய பொருளா வீடு வீடாக விநியோகம் செய்ய'- உச்சநீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details