தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்பு... நிதியுதவி அறிவித்த பஞ்சாப் முதலமைச்சர்! - பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்

சண்டிகர்: போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சண்டிகர்
சண்டிகர்

By

Published : Dec 3, 2020, 4:05 PM IST

மத்திய அரசால், அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் குர்ஜந்த் சிங், குர்பச்சன் சிங் ஆகிய இருவரும் மாரடைப்பு காரணமாக, கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், அவர்களது குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details