தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜினாமா ஏற்பு! - நவ்ஜோத் சிங்

சண்டிகர்: நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் ஏற்று கொண்டுள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து

By

Published : Jul 20, 2019, 1:38 PM IST

காங்கிரஸ் கட்சியில் நவ்ஜோத் சிங் சித்து இணைந்ததில் இருந்தே அம்மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்குக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. பின்னர், பாகிஸ்தான் ராணுவ தளபதியை நிகழ்ச்சி ஒன்றில் சித்து கட்டி அணைத்துள்ளார். இது, பலரால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது.

இதனால், சித்துவிடம் இருந்த இலாக்காகள் மாற்றியமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புதிய இலாக்கா பொறுப்புகளை ஏற்று கொள்ளாமால், தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பினார். இந்நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் விஜயந்திர பால் சிங்குக்கு அனுப்பியுள்ளதாக, அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details