அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய பெண்களுக்குக் கீர்த்தனை (பொது பிரார்த்தனை பாடல்கள்) செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சீக்கிய மதகுருக்களின் கோரிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்து, சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பஞ்சாப் சட்டப்பேரவை நேற்று (நவ., 7) ஒரு குறிப்பிடத்தக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்தத் தீர்மானத்தை மாநில அமைச்சர் டிரிப்ட் ராஜீந்தர் சிங் பஜ்வா முன்வைத்துப் பேசினார். அப்போது, “சீக்கிய மதகுரு நானக் தேவ் தனது வாழ்நாள் முழுவதும் சாதி அடிமைத்தனத்துக்கு எதிராகவும் பாலின சமத்துவத்துக்கு ஆதரவாகவும் போராடினார். அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் உள்ள நடைமுறை பெண்களுக்கு எதிராகவும் சமத்துவத்தில் பாகுபாடும் கொண்டுள்ளது. இதை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று அவர் கூறினார்.
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை: பினராயி விஜயன்