புனே பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகம் அருகே அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களே பெட்ரோல் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் நிலையங்களில், பெட்ரோல் நிரப்பும்போது ஊழியர்கள் ஏமாற்றுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளை கழுவ கிருமிநாசினி வழங்கப்படுகிறது. இதன்பின்னர் எவ்வாறு பெட்ரோல் நிரப்பவேண்டும் என ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு கற்றுத் தருகின்றனர். இதற்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்.