தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புனேவில் 25 மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா!

புனேவில் உள்ள ரூபி மருத்துவமனையில் 19 செவிலியர்கள் உள்ளிட்ட 25 பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

pune-25-staff-members-including-19-nurses-of-ruby-pune-hospital-test-coronavirus-plus-ve
pune-25-staff-members-including-19-nurses-of-ruby-pune-hospital-test-coronavirus-plus-ve

By

Published : Apr 21, 2020, 1:47 PM IST

இந்தியாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 18 ஆயிரத்து 601 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 490 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர்.

அம்மாநிலத்தில் இதுவரை 4 ஆயிரத்து 666 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 232 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புனேவில் உள்ள ரூபி மருத்துவமனையில் பணிபுரியும் 100 மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 19 செவிலியர்கள் உள்பட 25 பணியாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

புனேவில் இதுவரை 663 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் குணமடைந்துள்ளனர். அதேசமயம் 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மருத்துவ பணியாளர்களுக்கே கரோனா தொற்று வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உ.பி.யில் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details