இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
மோடி அரசின் தோல்வியே புல்வாமா தாக்குதலுக்குக் காரணம். கடந்த ஆட்சியில் இம்மாதிரியான சம்பவங்கள் நடந்தபோது முன்னாள் பிரதமரை (மன்மோகன் சிங்) சாடிவந்தீர்கள்! ஆனால் இப்போது புல்வாமா தாக்குதலிலிருந்து ஆதாயம் தேட நினைக்கிறீர்கள்.
பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் நீங்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக கூறுகிறீர்கள். ஆனால், இது உண்மை என எந்த வெளிநாட்டு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை.
ஒரு பிரதமர் பதவியில் இருப்பவர் இப்படிப் பொய் பேசலாமா? நான் இப்படிப் பொய் சொல்லமாட்டேன், என் மனசாட்சி அதனை அனுமதிக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ANDRA CM CHANDRABABU NAIDU