கடந்தாண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் யூசப் சோபன் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரணை செய்ய தேசிய புலனாய்வு முகமை 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்ய தவறிய காரணத்தால் யூசப் சோபனுக்கு பிணை வழங்கி தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிபதி பர்வான் சிங் உத்தரவிட்டுள்ளார்.