ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் லஸ்சிப்போரா என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கிதுப்பாக்கியால்சரமாரியாக சுட்டனர். இதனால் நிலைகுலைந்துபோன பாதுகாப்புப்படையினர் பின்னர் உஷாராயினர்.
புல்வாமாவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
இதையடுத்து, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
புல்வாமாவில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை மேலும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர்கள் மூன்று பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.