தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு -ஆர்வத்துடன் செல்லும் மாணவர்கள்!

புதுச்சேரி: கரோனா பரவலுக்கு மத்தியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

By

Published : Oct 8, 2020, 11:29 AM IST

கரோனா பரவலுக்கு மத்தியில் புதுச்சேரியில் கடந்த 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து 5, 6, 7ஆம் தேதிகளில் மாணவ-மாணவிகளின் இருக்கைகள், வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (அக்.8) முதல் மாணவர்களுக்கான பாடங்களில் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதாவது வாரத்தில் ஆறு நாள்கள் வகுப்புகள் நடைபெற உள்ளன.

குறிப்பாக 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மூன்று நாள்களும், 9 ,11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மூன்று நாள்களும் அதாவது காலை 10 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் மாணவர்களுக்கு வருகைப்பதிவேடு கிடையாது என்றும், பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிகளுக்கு மாணவர்கள் வர வேண்டும் என்றும் புதுச்சேரி மாநில கல்வித் துறை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பெரும்பாலான மாணவ மாணவிகள் பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிக்கு சென்றனர்.. அவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டு பள்ளிக்குள் அனுப்பப்பட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்குள் தகுந்த இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குப் பின்பு இன்று பள்ளிகள் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details