புதுச்சேரி வியாபாரிகள் தேர்தல் காலத்தில் இடர்பாடு இன்றி ரொக்கப்பணம் எடுத்துச் செல்வதற்கான நடத்தை விதிமுறைகள் பற்றிய விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி வருமான வரித்துறை அதிகாரி கணேசன் மற்றும் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் சிவசங்கரன் மற்றும் புதுச்சேரி வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர் .
வியாபாரிகள், வியாபார நோக்கத்திற்காக பணம் எடுத்துச் செல்லும் போது ஏற்படும் இன்னல்கள் குறித்தும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வங்கியின் மூலம் தங்களுடைய பண பரிவர்த்தனைகளை தொடர்வது குறித்தும் விவாதம் எழுந்தது.
இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஆட்சியா், வியாபாரிகளையும், பொதுமக்களையும் தங்கள் தொழில் சாராத எந்த விதமான செயலையும் செய்யாமல் தேர்தலை சுமுகமான முறையில் நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டு கொண்டாா்.
வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைப் பொறுத்தவரை ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆவணங்கள் இன்றி ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் வாகன சோதனையின் போது ரூபாய் பத்து லட்சத்திற்கு அதிகமான தொகை சிக்கினால் அது குறித்து வருமான துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறினாா்.