புதுச்சேரியில் ஊரடங்கின் போது, கடந்த 19ஆம் தேதி அன்று மரப்பாலம் சிக்னல் அருகே இருசக்கர மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞரை நிறுத்திய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து காவல் நிலையத்தில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெயர் ரமணா என்பதும் புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் கரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமணா அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பின்னர் மீண்டும் பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் கரோன இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் திருடப்பட்ட 13 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் கால் மூலம் ஜல்லிக்கட்டு காளைக்கு அரசு மருத்துவர் வைத்தியம்!