தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஈரான் கப்பலை காரைக்கால் துறைமுகத்திலிருந்துத் திருப்பி அனுப்ப வேண்டும்' - அன்பழகன் வலியுறுத்தல்! - Iran ship at karaikal port

புதுச்சேரி: கரோனா பரவதலைத் தடுக்க ஈரான் நாட்டு கப்பலில் உள்ள சரக்குகளை காரைக்கால் துறைமுகத்தில் இறக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் என அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் வலியுறுத்தினார்.

puduchery
puduchery

By

Published : Apr 1, 2020, 12:05 AM IST

புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில்," நாடு முழுவதும் கப்பல், விமானம், ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை துறைமுகம் உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் புதுச்சேரி காரைக்காலில் உள்ள தனியார் மார்க் துறைமுகம் மூடப்படவில்லை.

இந்நிலையில், நேற்று ஈரான் நாட்டிலிருந்து ஒன்றரை லட்சம் டன் எடை கொண்ட ஜிப்சம் எனப்படும் உரம் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு, காரைக்கால் துறைமுகத்திற்கு கப்பல் ஒன்று வந்துள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன்

இதனால் அப்பகுதிகளில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அக்கப்பலில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். எனவே, மக்களின் உயிரைக்கருத்தில் கொண்டு, துணை நிலை ஆளுநர் , முதலமைச்சர் ஆகியோர் தலையிட்டு ஈரான் நாட்டு கப்பலில் உள்ள சரக்குகளை இறக்காமல் அக்கப்பலை திருப்பி நடுக்கடலுக்கு அனுப்ப வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:'களைக்கட்டட்டும் வீடு கற்பனைத் திறத்தோடு' - மதுரை எம்பியின் ஏற்பாட்டில் கலை இலக்கியப் போட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details