புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.
புதுச்சேரியில் நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு! - பாண்லே பால்
புதுச்சேரி: அரசு நிறுவனமான பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாசகங்களை பதிவுசெய்து புதுச்சேரி தேர்தல் ஆணையம் வெளியிட்டுவருகிறது.

புதுச்சேரியில் நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு!
இந்நிலையில் புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாசகங்களை பதிவுசெய்து வெளியிட்டுவருகிறது.
அதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விழிப்புணர்வு வாசகங்கள்பதிவிடப்படுகின்றன. இந்த வித்தியாசமான செயல்முறையால் புதுச்சேரியில் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்கும் என்று புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.