புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஆயுத்த பணிகளில் மாநில தேர்தல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
புதுச்சேரி டெல்லி சிறப்பு பிரதிநிதி ராஜினாமா - புதுச்சேரி டெல்லி சிறப்பு பிரதிநிதி
புதுச்சேரி: காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்துவந்த ஜான் குமார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த சூழலில், புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்திருந்தார். தொடர்ந்து புதுவை காங். அலுவலகத்தில் நடந்த நேர்காணலிலும் அவர் கலந்துகொண்டார்.
இந்நிலையில் மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்த புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜான்குமார், முதலமைச்சர் நாராயணசாமியிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்தார். மேலும் புதுச்சேரி மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டிருந்த கார், சட்டப்பேரவையில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அலுவலகத்தையும் அவர் தற்போது முதலமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.