தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெள்ளத்தால் சூழ்ந்த ஏனாம் பகுதி - பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவு!

புதுச்சேரி: வெள்ளத்தால் சூழ்ந்துள்ள ஏனாம் பகுதி பிராந்திய அலுவலர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி காணொலி மூலம் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

cm narayanasamy
cm narayanasamy

By

Published : Aug 19, 2020, 10:02 PM IST

கோதாவரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கோதாவரி ஆற்றங்கரையோரம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏனாம் பிராந்திய பகுதியை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் பார்வையிட்டார்.

வீடுகளை இழந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் காணொலி மூலம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும், துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:பிரபல பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

ABOUT THE AUTHOR

...view details