தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலுவை ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் - நெசவாளர் சங்கத்தினர் கஞ்சி காய்ச்சிப் போராட்டம் - Puducherry outstanding pension

புதுச்சேரி: நெசவாளர்களுக்கு நிலுவை ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெசவாளர் சங்கத்தினர் தலைமை தபால் நிலையம் அருகே கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.

நெசவாளர் சங்கத்தினர் கஞ்சி காய்ச்சி போராட்டம்
நெசவாளர் சங்கத்தினர் கஞ்சி காய்ச்சி போராட்டம்

By

Published : Mar 11, 2020, 11:31 PM IST

புதுச்சேரி அரசு இலவச துணிகளை பாண்டெக்ஸ், பாண்பேட் உள்ளிட்ட அரசு நிறுவனம் மூலம் உற்பத்தி செய்து வழங்க வேண்டும், பொங்கல் பண்டிகைக்கு பணத்திற்குப் பதிலாக இலவசமாகத் துணிகளை வழங்கவேண்டும், அந்தத் துணிகளை அரசு கைத்தறி நிறுவனமான பாண்ட் எக்ஸ்சிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை கைத்தறி தொழிலாளர் சங்கம், ஏஐடியுசி சார்பில் தலைமை தபால் நிலையம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கைத்தறி தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் அபிஷேகம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொதுச் செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

நெசவாளர் சங்கத்தினர் கஞ்சி காய்ச்சிப் போராட்டம்

போராட்டத்தின்போது நெசவாளர்கள், அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கினர்.

இதையும் படிங்க: எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஊர்காவல் படை வீரர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details