புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் இரண்டு பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள ஐந்து பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார். புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு காரணமாக நகரப் பகுதிக்குள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை கடைகள் திறக்கப்படுகின்றன.
குறிப்பாக முக்கிய கடைவீதியான காந்தி வீதி, நேரு வீதி, அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் ட்ராபிக் சிக்னலில் பொதுமக்கள் நின்று செல்லும்போது தகுந்த இடைவெளி கடைபிடிக்காமல் செல்வதை கண்டறிந்த புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை, நகரின் முக்கிய சந்திப்புகளான அஜந்தா சிக்னல், ராஜா சிக்னல், அண்ணாசாலை உள்ளிட்ட 25 சிக்னல் பகுதிகளில் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு கட்டங்கள் போட்டுள்ளனர். இதனை ட்ராபிக் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் கடைப்பிடித்து வருகின்றனர்.
அஜந்தா சிக்னல் அருகே நகர பகுதிக்குள் வரும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை ஒரு மீட்டர் இடைவெளிவுடன் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆய்வாளர் ஜெயராமன் தெரிவித்தார்.
இதையும் பார்க்க: பொருளாதார மீட்டெடுப்புத் திட்டத்தை அறிவிக்கத் தயாராகும் இந்தியா!