புதுச்சேரி தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு மூன்று ஆண்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். இதில், மொத்தம் 1,038 உறுப்பினர்கள் உள்ளனர். தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 11 பதவிகளுக்கான தேர்தல் நேற்று (பிப். 23) நடைபெற்றது.
புதுவை தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தேர்தல் - ஆர்வத்துடன் வாக்களித்த தமிழறிஞர்கள் - puducherry tamil sangam election
புதுச்சேரி: தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

tamil sangam election in puducherry
புதுவை தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தேர்தல்
இதில், தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமையில் 11 பேர் கொண்ட செயல்பாட்டு அணியும், மூத்தத் தமிழறிஞர் நாயகி தலைமையில் தமிழ்த் தொண்டர் அணியும் போட்டியிடுகின்றன. தமிழ்ச் சங்க கட்டட வளாகத்தில் தொடங்கிய தேர்தல் நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் தமிழறிஞர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட உள்ளன.
இதையும் படிங்க: நிறைவடைந்த புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: ஒரு கோடி புத்தகங்கள் விற்பனை!