புதுச்சேரியில், அரசு துறைகளிலுள்ள காலி பணியிடங்களை நிரப்ப, அரசு தேர்வுகள் நடத்தக்கோரி அம்மாநில பட்டதாரி இளைஞர்கள் அமைதி ஊர்வலம் மேற்கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சுதேசி மில் அருகிலிருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு தலைமை தபால் நிலையம் வந்தடைந்தனர். அப்படியே, அங்கிருந்து சட்டசபைக்கு சென்று முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு கொடுப்பதாக இருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் நாராயணசாமி, சட்டசபைக்குக் காரில் செல்லும் வழியில் தலைமைத் தபால் நிலையம் முன்பு கூடியிருந்த பட்டதாரி இளைஞர்களை சந்தித்து பேசினார்.