தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மருத்துவ குணமிக்க ஆடைகள் விற்பனை

புதுச்சேரி: வேப்ப இலை, துளசி உள்ளி மருத்துவ குணமிக்க பொருட்களால் உருவாக்கப்பட்ட ஆடைகள் புதுச்சேரியில் விற்பனைக்கு வந்துள்ளது.

puducherry sells the maximum number of medicinal clothes
மருத்துவம் சார்ந்த ஆடைகள் விற்பனை

By

Published : Feb 9, 2020, 10:17 AM IST

தென் இந்தியாவிலேயே பெங்களூரு நகரத்துக்கு அடுத்தப்படியாக நவநாகரீக ஆடைகள் பயன்படுத்தப்படும் ஒரு காஸ்மோ நகரமாக புதுச்சேரி விளங்குகிறது.

புதுச்சேரி, ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள சில நிறுவனங்கள், மருத்துவம் சார்ந்த ஆடைகளை தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்துவருகிறது.

அதாவது குறிப்பிட்ட நிறுவனங்கள், துளசி, வேப்ப இலை போன்ற மருத்துவம் குணம் கொண்ட ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது.

இந்த ஆடைகளை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட அதிக பேர் வாங்கி செல்கின்றனர்.

குறிப்பாக இந்த ஆடையானது தேகத் தோல்களுக்கு எந்தவித பாதிப்பும் தராது என்ற உத்திரவாதத்தையும் துளசி ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவம் சார்ந்த ஆடைகள் விற்பனை

இதையும் படிங்க: வேலைக்கு காத்திருக்காமல் உருவாக்குங்கள் -ஆடை வடிவமைப்பாளர் டிம் ஜோசப் மெண்டோசா பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details