கரோனா பரவலுக்கு மத்தியில், புதுச்சேரியில் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் நடைபெற்று வந்தன. தற்போது நிவர் புயல் காரணமாக அம்மாநிலத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
நிவர் புயல் எதிரொலி - புதுச்சேரி பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை - nivar pudhuchery
புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 28ஆம் தேதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பள்ளிகள்
மேலும் இன்று இரவு புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ஆம் தேதிவரை விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:நிவர் புயல் - சென்னை மழை நிலவரம்