புதுச்சேரி மாநிலத்தில் நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 112 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 151ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் அலுவலகப் பணியாளருக்கு கரோனா தொற்று - அலுவலகம் மூடல் - raj niwas
புதுச்சேரி: அலுவலகப் பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆளுநர் மாளிகை மூடப்பட்டது.
ராஜ் நிவாஸ் அலுவலகம் மூடல்
இதையடுத்து இரண்டு நாள்களுக்கு ஆளுநர் மாளிகை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அலுவலர்கள், ஊழியர்கள், காவலர்கள் என அனைவருக்கும் உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஆளுநர் மாளிகை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம்செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் அமைச்சருக்கு கரோனா - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!