தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி - உயர் அலுவலர்கள் பங்கேற்பு - Puducherry Guards

புதுச்சேரி: காவல்துறை தலைமையகத்தில் காவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சியில் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காவலர்களுக்கு பதிவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி
காவலர்களுக்கு பதிவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி

By

Published : Mar 11, 2020, 11:26 PM IST

புதுச்சேரி காவல் துறையில் காலியாக இருந்த 62 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்குத் தகுதியான 24 துணை உதவி ஆய்வாளர்கள், 38 தலைமைக் காவலர்கள் ஆகியோருக்கு உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு இன்று அளிக்கப்பட்டது.

இதற்கான விழா புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், உயர் காவல் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி

இதையடுத்து பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு உயர் அலுவலர்கள் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி!

ABOUT THE AUTHOR

...view details