சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 650 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி அதிதீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - Puducherry Amban Storm Activity
புதுச்சேரி: ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் புயல் தூர முன்னறிவிப்பு கொடி எண்-1 ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடுமையான சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு