கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கரோனா அச்சமின்றி சாலையில் சுற்றித்திரிகின்றனர்.
ஊரடங்கை மீறி வெளியில் வருபவர்கள் மீது காவல் துறையினர் இதுவரை 1,442 வழக்குகள் பதிவு செய்தது மட்டுமின்றி 8 ஆயிரத்து 84 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1017 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் துறையுடன் இணைந்த என்சிசி மாணவர்கள் இந்நிலையில், கரோனா தடுப்பு பணியில் காவல் துறையினர் முழுமையாக ஈடுபடும் சூழலில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்சிசி மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், இந்நாள் மற்றும் முன்னாள் என்சிசி 88 மாணவர்கள் முதல்கட்டமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடமான ஏடிஎம், வங்கிகள் ஆகியவற்றில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதிசெய்யவும், முதியோருக்கு உதவும் வகையிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இச்செயலுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு காவல் துறை தரப்பில் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:அனைத்து சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தரவு!