தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவி காவலர்கள்! - கூலி தொழிலாளர்கள்

புதுச்சேரி: சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு நடந்து சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய காவல்துறையினரின் சேவையை சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவி காவலர்கள்!
மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவி காவலர்கள்!

By

Published : May 26, 2020, 6:04 PM IST

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொது போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், வெளியூரில் தங்கி வேலைபார்த்துவந்த கூலித் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சித்தானந்தா கோவில் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது கையில் பையுடன் நடந்து சென்றதை பார்த்த புதுச்சேரி காவலர்கள், அவரிடன் விசாரணை செய்தனர். அப்போது அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என தெரியவந்தது.

அந்த பெண் பசியுடன் இருப்பதை உணர்ந்த காவலர்கள், அவருக்கு உணவு கொடுத்து உதவினர். மேலும், அவர் கையில் வைத்திருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது, அவர் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் சிதம்பரத்தில் சித்தாள் வேலைக்கு சென்றதும் கடந்த மூன்று நாள்களாக அவருடைய உறவினர்கள் அவரை தேடிக்கொண்டிருந்ததும் தெரியவந்தது. வேலை கிடைக்காததால் சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு நடந்தே சென்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துடன், சென்னைக்கு சென்ற கண்டெய்னர் லாரி மூலம் அந்தப் பெண்ணை அனுப்பிவைத்தனர். அவரது செலவிற்கு 500 ரூபாய் பணம் கொடுத்ததோடு, அவர் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இவ்வளவு பணிச்சுமைக்கு நடுவிலும் உன்னதமான சேவை செய்த காவலர்களுக்கு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:இந்திய அமெரிக்க தம்பதி கண்டுபிடித்த விலை மலிவான வென்டிலேட்டர்

ABOUT THE AUTHOR

...view details