பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வில்லியனூரில் மங்களம் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள்; ஒலிபெருக்கிகளைப் பறிமுதல் செய்த போலீஸ் - புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வில்லியனூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகளை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில், ஒலிப்பெருக்கியின் மூலம் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி பெறவில்லை எனக்கூறி காவல் துறையினர் ஒலிபெருக்கிகளை அவர்களிடமிருந்து பறிமுதல்செய்தனர்.