புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 30) 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காவலருக்கு கரோனா தொற்று உறுதி: வேறு இடத்துக்கு காவல் நிலையம் மாற்றம் - புதுச்சேரி பெரியகடை காவல் நிலையம்
புதுச்சேரி: பெரியகடை காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரிய கடை காவல் நிலைய காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அதே பகுதியில் அமைந்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் மூடப்பட்டது.
அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 50 காவலர்களுக்கும் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அந்தக் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் தனியார் பகுதியில் பெரியகடை காவல் நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.