புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், இன்று கரோனா விவரம் குறித்து வீடியோ பதிவுச் செய்து வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரியில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு, எட்டாம் நாள் மீண்டும் சோதனை செய்யப்படுகிறது.
ஒன்பதாம் நாள் சோதனை முடிவுகளில், கரோனா தொற்று இல்லை என்றால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். இதுவரை 4,486 பேருக்கு கரோனா நோய் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில், 4,416 பேருக்கு நோய் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இன்னும் 53 பேருக்கு முடிவுகள் வரவில்லை.
முதலமைச்சர் நாராயணசாமி, நான் அலுவலர்கள் பிரதமரிடம் காணொலியில் பங்கேற்றபோது முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரிக்கு என்னென்ன தேவைகள் இன்னும் உள்ளன. இன்னும் என்ன பாக்கியுள்ளது என்பது குறித்து பேசினார். மே 17ஆம் தேதிக்குப் பிறகு எந்த மாதிரியான தளர்வுகள் தேவை உள்ளது.